என் தலைவர்

என் தலைவர்

நான்

My photo
படிச்சது மின்னியல் மற்றும் மின்னனுவியல் ஆனா பிடிச்சது கணினியியல் வேற வழி ஏதோ ஒரு வேலையில் ஏதோ ஒரு நாட்டில்....... இந்த வலைப்பதிவுகள் எனது அறிவை கசக்கி எழுதலாம்-னு நெனச்சு தான் ஆரம்பிச்சேன் என்ன செய்ய இல்லை........ நேரம் இல்லைங்க...!? டூட்டிலே வேலை செய்தது போக மிச்ச நேரத்துல எழுதிலாம் னு இருக்கேன் பிடித்தால் ஓட்டும் பின்னுட்டமும் போடுங்க.... பிடிக்காட்டாலும் போடுங்க நா ஒன்னும் தப்பா எடுத்துகிற போரதுயில்ல........

பின்தொடர

இதுவரை

Popular Posts

Thursday, October 29, 2009
வரதட்சணை ஒரு வன்கொடுமைவரதட்சணை வாங்குவதும் குற்றம் கொடுப்பதும் குற்றம் பெண்களுக்கு எதிராக ஆண் சமுகம் செய்யும் அநீதி பெண்ணையும் கொடுத்து கூட பணமும் பொருளும் கொடுத்து சுருக்கமாக சொல்லனும்னா கரும்பு தின்ன கூலி கொடுப்பதை போன்று வரதட்சணை................

இந்த மாதிரி எல்லாறையும் போல எழுதினா என்ன இருக்கு வரதட்சணையே பத்தி எழுதனும் வந்தாச்சு எழுதிதான் பாப்போமே.

வரதட்சணை பல வகையா இருக்கு நல்லா படித்து சிறந்த வேலையில் சமுதாயத்திலே நல்ல அந்தஸ்த்தில குறிப்பா நகர பகுதியில் உள்ளவங்க  வரதட்சணையே ஒரு பொருட்டா எடுத்துக்கொள்வது கம்மி.

மற்றோரு வகை கிராம பகுதி மக்கள் (இப்ப இருக்கிற கிராமம்லாம் பாரதிராஜா படத்தில வர்ர மாதிரி இல்லைங்க எத்துனை வீட்ல Wifi Modem வச்சு இணையதளம் பயன்படுத்துராங்கனு உங்க மடிகணியே கொண்டுக்கு போய் சோதித்து பாருங்க) அங்கே எடுத்துக்கிட்டா படிச்சவன் நல்ல பணவசதி உள்ளவனும் இருக்கான் அவன் வீட்டுல இருந்து மூனு வீடு தள்ளி அரசாங்கம் கொடுக்கிர இலவச ஒரு பல்பு மின்சாரம் உள்ள குடுசைக்காரனும் இருக்கான்

இந்த இருவர்டையும் பாலாபோன பணம் தான் ஏற்ற இறக்கமா இருக்கே தவிற குழந்தை பிறப்பது உலக மக்கள் அணைவருக்கும் சமமாகவே உள்ளது போல் அவனுக்கும் இவனுக்கும் பெண்குழந்தை பிறக்கவே செய்கிறது

இங்கு ஒன்றை தெளிவாக்கவே விரும்புகிறேன் பண ஆசை இருக்க கூடாதுனோ ஆசையே துறக்க வேண்டும்னோ புத்தர் மாதிரி சொல்லமாட்டேன் பணம்னா பிணமும் வாய்பிளக்கும் போது மனிதன் என்ன விதிவிலக்கா...

பணக்காரா நீ ஊரக்கூட்டி பந்தி போட்டு 1000 பவுன் நகைபோட்டு 20 லட்சம் ரோக்கம் கொடுத்து 10 வீட்டு நிலம் கொடுத்து கடுகு முதல் கார் வரை அணைத்தும் கொடுத்து உன் ஆசை மகளுக்கு திருமணம் செய்து கொடு அதனால் எனக்கென்ன நான் கவலையோ போராமையோ படபோவது இல்லை

என் கவலையோ உன் வீட்டிலிருந்து மூனு வீடு தள்ளி இருக்கானே அந்த ஒத்த குடுசைக்காரன் அவனைப்பத்திதான் அவனுக்கும் பெண்பிள்ளை உண்டு அவளும் உன்பிள்ளையும் பள்ளி தோழிகள் அதனால் உனக்கென்ன உன் மகள் ஹனிமூனுக்கு ஹாங்காங் செல்ல நீ வேண்டியதை பார்.

குடுசைகாரனின் மகளையும் பெண்பார்க்க வராமல் இல்லை இன்னுமோரு குடுசைகாரனுக. ஆரம்பமே அமர்க்களம் வந்தவன்லே ஒருத்த ”ஆமா உங்க வீட்டுக்கு பக்கத்துல இருக்காருல நம்ம இன்னாறு”  “ஆமா....” ”அவரு மகளுக்கு 20 லட்ச ரூவா கொடுத்து 10 வீட்டு நெலமும் கொடுத்து அதுமட்டுமா 1000 பவன்ல நகை வேற பண்ணிபோட்டு இருக்காரு மனுசன்” அதுக்கு நம்மாளு ”நானும் என்னால முடுஞ்சத செய்றங்க” சமுதய  தலைவர்ட (!?) பிச்சை எடுக்க இருப்பிட சான்றிதழ் பெற்றுக்கொண்டு கிளம்பிவிட்டார் நம்ம குடுசைகாரன்.

அட பணக்கார பாவிகளா நீ வரதட்சணை வாங்குறதோ கொடுக்குறதோ தவறுனு நான் சொல்ல வரலைடா நீ செய்த ஆடம்பர திருமணம் ஊரக்கூட்டி நீ கொடுத்த வரதட்சணை சீர்சனத்தியால் என்னுடை ஏழை சகோதரியின் குடும்பத்தை பார்டா.

தன் தந்தை பிறந்ததில் இருந்து நெறையா காசு இல்லாட்டாலும் குடிக்க கஞ்சிக்கு தன்மானத்தோடு உழைத்து தனக்கு கஞ்சியுத்துனாரு இப்ப ஏதோ தன்னால தான் தன் தன்மான தந்தை பிச்சை எடுக்கும் அளவுக்கு போய்டானு அந்த சகோதரியின் மனதை பத்தி உனக்கென்ன கவுரவத்தை நிலைநாட்ட நீ கொடு வரதட்சணை

ஊரல்லாம் பிச்சையடுத்தும் நீ கொடுத்த 20 லட்சத்தாலே அவன் கேட்ட 1லட்சம் கூட கொடுக்க முடியாம தினம் தினம் மகளை நெனச்சு இதயம் நின்னு செத்த அந்த குடுசைகாரனை பத்தி உனக்கென்ன நீ ஊரக்கூட்டி கொடு வரதட்சணை.

உன் மகள் புள்ள பெத்து அந்த புள்ள வயசுக்கு வந்து சடங்கார வரைக்கும் கன்னி கழியாமை இருக்கால குடுசைகாரன் மகள் அவளை பத்தி உனக்கென்ன நீ ஊரேல்லாம் தண்டோரா போட்டு கொடு வரதட்சணை.

இப்ப இருக்குற கவர்ச்சியுலகத்துல தன் உணர்ச்சிக்கு வடிகால் இல்லாம தவித்து ஏங்கி தடுமாறி தன் வாழ்க்கையோட பதையே மாறி மொத்ததுல நாசமா போனவளை பத்தி உனக்கென்ன நீ கொடு வாங்கு வரதட்சணை அதனால் எனக்கென்ன.

கடைசியா பணக்கார பாவி நீ கொடுத்த வரதட்சணையே ஊரைக்கூட்டி பெறுமைக்காக கொடுக்காம மறைமுகமா கொடுத்து இருந்தா ஒரு வேலை குடுசைக்காரனும் அவன் மகளும் நல்லா இருந்திருப்பாங்கள்னு நினைக்க தோனுதுடா..............




3 comments:

  1. கூந்தல் இருக்குரவ முடிஞ்சிக்கிறா!
    அதைப் பத்தி இவளுக்கு என்ன?

    எந்த தமிழ் படத்தில் வரதட்சணைய இயல்பா காட்டாம இருக்காங்க?
    குடிசைக்காரன் பார்க்கிற மாபிள்ளைக்கு தான் அறிவு வேணும் நாம் வரடக்ஷினை கேட்கறது தப்பு என?

    நான் பென்ஸ் கார்ல போறத பார்த்து நடந்து போற நீ ஓரம்தான் போகணும்.

    ReplyDelete
  2. @நாளும் நலமே விளையட்டும்,

    வருகைக்கும் கருத்து கூறியமைக்கும் நன்றி

    உங்க சமுதாய சிந்தனைக்கும் பெரிய நன்றி.............

    ReplyDelete
  3. ///////நான் பென்ஸ் கார்ல போறத பார்த்து நடந்து போற நீ ஓரம்தான் போகணும்./////

    என்னுடைய கவலை நி பென்ஸ் கார்ல போறப்ப ரோட்ல தேங்கி நிக்குர தண்ணீ ஓரம் போற என்மேல் படாமல் மெதுவா போகலாம் இல்லையா

    ReplyDelete