என் தலைவர்

என் தலைவர்

நான்

My photo
படிச்சது மின்னியல் மற்றும் மின்னனுவியல் ஆனா பிடிச்சது கணினியியல் வேற வழி ஏதோ ஒரு வேலையில் ஏதோ ஒரு நாட்டில்....... இந்த வலைப்பதிவுகள் எனது அறிவை கசக்கி எழுதலாம்-னு நெனச்சு தான் ஆரம்பிச்சேன் என்ன செய்ய இல்லை........ நேரம் இல்லைங்க...!? டூட்டிலே வேலை செய்தது போக மிச்ச நேரத்துல எழுதிலாம் னு இருக்கேன் பிடித்தால் ஓட்டும் பின்னுட்டமும் போடுங்க.... பிடிக்காட்டாலும் போடுங்க நா ஒன்னும் தப்பா எடுத்துகிற போரதுயில்ல........

பின்தொடர

இதுவரை

Popular Posts

Monday, January 04, 2010
“அழகான ஊர் பாரதிராஜா படத்தில வர்ரமாதிரி பச்ச பசேல்னு எங்கு பார்த்தாலும் பசுமை இப்படிலாம் எங்கூரப்பத்தி எழுதனும் ஆசை பொய் சொல்ரது அவ்வளவா நல்லா இல்ல” இருந்தாலும்



எனக்கும் எனது நண்பர்களுக்கும் எங்கூரும் எமது மாவட்டமும் அழகு தான்.

காலேஜ் முடிஞ்சு போச்சு அடுத்து நல்ல வேலை-ல சேர்ந்து கைநிறையா சம்பாதிக்கனும்னு கெட்ட எண்ணம்லாம் இல்ல. சென்னையில தங்கி அழுத்து போர வரைக்கும் சென்னையே சுத்தனும், சென்னையே சுத்தனும், சென்னையே சுத்தனும், இது மட்டும் தான் எண்ணம்.

சென்னைக்கு போறதுக்கு வீட்ல காரணம் வேணும் இது சப்ப மேட்டர் எல்லாறையும் போல வேலை தேடி கைநிறையா சம்பாதிக்கப்போறோம்னோம் வேணாம்னு சொல்ற வீடு ஏது, “இரவு சேது எக்ஸ்பிரஸ் அடுத்த நாள் காலை எழும்புர் அங்கிருந்து நேரா சென்னை கடற்கரை (பீச் ஸ்டேசன்) மண்ணடி அங்கப்பன் நாயக்கன் தெருவில் மேன்ஷன்”.

வந்த நாள் பகல் முழுவதும் துாங்கிட்டு மாலை முதன் முதலில் சென்னை வந்த முதல் திட்டம் மெரினா பீச் போய் சுத்தனும் திட்டம் நிறைவேறிய உடன் மறுநாளைக்கான திட்டம் ரூமுக்கு வந்த உடனே ரெடி அது ஸ்பென்சர்க்கு ஷாப்பிங் போய் ஒன்னும் வாங்காம சாந்தில இரண்டாமாட்டம் சினிமா பார்க்கனும்.

நாங்க போட்ட திட்டப்படி எல்லாமே சரிய நடந்தது, 3மணிக்கு எழுந்து சாப்பிட்டு குளித்து 5மணிக்கு ரெடியாகி ஸ்பென்சருக்கு வந்தாச்சு முழுவதும் சுத்தி கால் வழி வந்ததுக்கு அப்புறம் சுமார் 9, 9:30 மணிப்போல திட்டத்தின் இரண்டாம் கட்டத்திற்கு வந்தோம் டிக்கெட் எடுத்து, புது பழக்கம் நம்பர் பார்த்து சீட்டை தேடி பிடித்து படத்தை பார்த்து முடித்தோம் எங்க திட்டப்படி எல்லாமே சரியா நடந்தது தியேட்டரை விட்டு வெளியே வந்தா இது சென்னையா இல்ல நம்மூரா (இது கொஞ்சம் ஓவர் தான்) ஒரு ஈ காக்கா இல்ல லாரி மட்டும் அங்கும் இங்கும் போய்க்கொண்டு இருக்க அங்கேயே ஒரு திட்டம்.

அங்கு இருந்து ரூம்மிற்கு நடந்து போவது, திட்டம் போட்டகூடனேயே சரிய நிறைவேற்றுவது எங்க கொள்கை.


நடந்து வரும் போது அண்ணாசாலை ஆரம்பத்தில் பெரியார் சிலையே கடக்கும் போது பள்ளிலே படிச்ச ஞபகம் "தொண்டு செய்து பழுத்த பழம் துாய தாடி மார்பிள் விழும்-னு" ஓ அந்த பெரியார் இவர் தானா இந்த கற்சிலை வணங்ககூடாதுனு சொன்ன அந்த பெரியாரோட கற்சிலை இது தானானு அங்கே உள்ள கல்வெட்ட பார்த்து படிச்சுக்கிட்டே நகர்ந்தா பக்கத்தில காவல் துறை அதாங்க போலீஸ் வண்டி

டே இங்க வாங்கடா ! என்ன சார்னு பக்கத்துல போனம்

பெயர் என்னடா?

முகம்மது ஜியாவுதீன்
அஹமது சர்புதீன்
முகம்மது ஃபாசில்
முகம்மது சமீம்

எங்க பெயர கேட்டதும் போலீஸ்கார் முகத்தில் சின்ன மாற்றம் ஒரு வேலை எங்க நான்கு ல ஒருத்தன் எங்க ஊர் 2வது வார்டு கவுன்சிலர் தம்பி அதனால பயந்துட்டாரோ.

வண்டில ஏற்றானு சொல்ல

வண்டில ஏற்னோம்

எங்க இருந்து டா வர்றீங்க?

சார் சக்கெண்ட் ஷோ சினிமா பார்த்துட்டு வர்றோம் சார் இந்தா இருக்கு டிக்கெட் சார்

யோவ் ஏட்டு அத முதல்ல வாங்குயா

அரசு கொடுத்த வயர்லஸ்ல பேசுறாரு நம்ம போலீஸ்கார்

“அண்ணாசலை-ல நான்கு பேர தீவிரவாதினு சந்தேகத்தின் பேர்ல புடுச்சு வச்சு இருக்கோம் OVER”

“நாழு பேரும் தியேட்டர்ல ஏதோ சதி திட்டம் தீட்டி இருக்காங்க அதற்கான ஆதாரம் அவங்க கையில இருக்கு OVER”

இது வரை புரியாதது:-

1)மெரினா பீச்சுக்கு போகனும் ஸ்பென்ஸர்ல சுத்தனும் சாந்தில படம் பார்க்கனும்னு எங்க திட்டத்தை போலீஸ்ல யார் சொல்லி இருப்பா?

2)ரூம்ல தான் திட்டம் போட்டோம் ஆனா போலீஸ் தியேட்டர்ல திட்டம் போட்டதா சொல்லுதே நாங்க தான் தியேட்டர்ல ஒன்னுமே பேசலையே

3)மெட்ராஸ்ல தியேட்டர்க்கு போனா தீவிரவாதினு ஏன் எங்க ஊர்ல ஒரு பயபுள்ளையும் சொல்ல-ல




2 comments:

  1. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

    நல்ல எழுத்து நடை. தொடர்ந்து எழுதுங்க இன்ஷா அல்லாஹ்

    ReplyDelete
    Replies
    1. ஜசாக்கல்லாஹ் ஹைர் சகோ :)

      Delete